Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு



மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பதில் அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சென்னையில் அதிமுக தலைவரால் அறையப்பட்டது பற்றி மாநிலங்களவையில் கடந்த 1 ம் தேதி முறையிட்டேன். அச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நான் வசித்து வரும் நார்த் அவென்யூ பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஒரேயொரு காவலர் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் முறையிட்ட அதே நாளில் திருநெல்வேலி மாவட்டம், உவரி கிராமத்தில் உள்ள எனது இல்லத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் எனது கணவர், மகன் ஆகியோர் மீது போலியாக சில வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் இருவரையும் கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் நீடிப்பதால், சுதந்திரமாக நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பாதக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நாடாளுமன்றம் செல்ல கூடுதல் பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, எம்.பிக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி அரசு, காவல்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ