Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பா,குடும்பத்தினர் மீது இளம்பெண்கள் பாலியல் புகார்-தூத்துக்குடியில் பரபரப்பு!

எம்.பி. சசிகலா புஷ்பா மீதும் அவரின் கணவர்,மகன் ஆகியோர் மீது  தூத்துக்குடியில் இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு இன்று(திங்கள்) வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும் எம்.பி. சசிகலாபுஷ்பா மற்றும் அவரின்  குடும்பத்தினர் 'எங்களை பாலியல் தொந்தரவு செய்தார்கள்' என்றும் 'எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கோரி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், "திசையன்விளை ஆணைகுடி ஊரைச் சேர்ந்த நானும் எனது அக்காள் ஜான்சிராணியும் கடந்த 2011-ம் வருஷம் சென்னையில் இருக்கும் சசிகலா புஷ்பா வீட்டு வேலைக்குப்  போனோம். பின்னர் தூத்துக்குடி மேயர் ஆனவுடன் அவர், எங்களை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றார்.  அவர் கூப்பிட்டவுடன்  உடனே போய் நிற்கவில்லை என்றால் அசிங்கமா திட்டி அடிப்பார்.

சில சமயம் சசிகலாபுஷ்பா மசாஜ் பண்ணிவிட சொல்லுவார். மசாஜ் சரியாக பண்ணவில்லை என்றால் அசிங்கமாக பேசி காலால் எட்டி மிதிப்பார். அதே போல் அவரது கணவரும்  மசாஜ் பண்ண சொல்லி கொடுமைப்படுத்துவார். சசிகலாபுஷ்பாவின் மகன் பிரதீப் செக்ஸ்டார்ச்சர் கொடுத்தான்.

2015-ம் வருஷம் சசிகலாபுஷ்பாவின் அம்மா கெளரி சென்னைக்கு வீட்டிற்கு வந்தார். அந்த சமயம் நான் விட்டைவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தேன்.  அவங்க அம்மா கெளரி உட்பட பலரும் சேர்ந்து என்னை அடித்து மிதித்தார்கள்.
சசிகலாபுஷ்பா, எம்.பி என்கிற அதிகாரத்தோடு இருந்ததால் உயிருக்கு பயந்து இதை யாரிடமும் நாங்கள் சொல்லவில்லை.

அவர் சம்மந்தமாக பல புகார்கள் சொல்லப்பட்டு வருவதால் நானும் புகார் கொடுக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வழக்கறிஞர் மற்றும் பெண் ஒருவர் மூலம் அழைத்து வரப்பட்ட  பானுமதியிடம் நாம் பேசினோம்.

‘’சசிகலாபுஷ்பா வீட்டிற்கு பிலால் சார் அடிக்கடி வந்து போவார். பிறகு அவர் பக்கத்திலே தங்கி கணவன் மனைவியாகவே இருந்தார். அதுபோல் பழனியப்பன் சார், நடுராத்திரியில வருவார். இவங்கெல்லாம் பெட்ரூம்லேயே வைச்சு குடிப்பாங்க. நாங்க வெளியில காத்து நிக்கனும். இவங்களை பகைச்சிட்டு வெளியில் போனா உயிரோடு இருக்க முடியாது. இதுவரையிலும் ஏழுபேர் உயிரோடு இல்லை. தற்கொலை, விபத்துன்னு செத்து போயிருக்காங்க. என் கணவர் கூட விபத்துல இறந்தார். அது கூட இவங்கதான் கொன்றிருப்பாங்கலோன்னு நான் சந்தேகப்படுறேன்” என்றார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சசிகலா புஷ்பாவின் உறவினர் சிலர் நம்மிடம், ‘’பெரியவங்களை பகைச்சா என்ன ஆகும் என்கிறதுக்கு இது உதாரணம். ஏற்கெனவே தன்னை டார்ச்சர் செய்து விரட்டினார்கள் என்று சொல்ற அந்தப்  பெண், அதற்குப்  பிறகு அதே வீட்டிற்கு தன்னுடைய அக்காள் வேலைக்கு சேர்ந்தாள் என்று சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா? எப்படியும் கதற வைக்க வேண்டும் என்பதற்காக பல கோணங்களில் மாவட்டம் தோறும் பலர் இப்படி புகாரோடு கிளம்பியிருக்கிறாங்க. நிச்சயமாக இது பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை எதிர்பார்த்துதான் கோர்ட்ல முன் ஜாமீன் வாங்கினாங்க. கொலை மிரட்டல் தனக்கு வர்றதா சொன்னதால் தானே டெல்லியில கூடுதல் பாதுகாப்பு தர சொல்லியிருக்காங்க." என்றனர் கவலையோடு.

-எஸ்.சரவணப்பெருமாள்,
படங்கள் : ஏ.சிதம்பரம்
 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ