Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்:திரையுலகினர் அஞ்சலி

சென்னை: பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் தனது 68வது வயதில்   சென்னையில் காலமானார். 

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ம் ஆண்டு  எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இவர். ' பூவும் பொட்டும்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தொடர்ந்து எம்.ஜி.ஆரின்  'அடிமைப்பெண்' படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடந்த ஒரு  மாதம் முன்பு ஜோதிலட்சுமி  திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இறுதிச்  சடங்கு இன்று(செவ்வாய்) மாலை சென்னையில்  கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ