Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் நிலையத்தில் மகளைத் தொலைத்த தாய்! - முதல்வருக்கு ஒரு பாசக் கோரிக்கை

ணவனை இழந்த நிலையில்,குடியிருந்த வீடும் அபகரிக்கப்பட்ட சூழலில் துன்பம் தாங்காமல் தமிழக முதல்வரிடம் புகார் அளித்து உதவி வேண்டிய முதியவயது பெண்மணியின் மகள், சென்னையில் காணாமல் போன சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சரஸ்வதி என்ற அந்தப் பெண்மணி, சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விகடனுக்காக அளித்த பேட்டி...

"என் பேரு சரஸ்வதி, என் வீட்டுக்காரர் பெயர் ராமசாமி அவர் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எங்களுக்கு பூவாயி, இந்திராகாந்தி, காந்திமதி என்ற 3 பெண்களும், கம்பர் என்ற ஒரு பையனும் இருக்கிறான். நாங்கள் குடும்பத்தோடு வாழப்பாடி அருகில் உள்ள ஏத்தாப்பூரில் குடியிருக்கிறோம்.

2 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். காந்திமதி என்ற பெண்ணும், கம்பர் என்ற பையனும் சற்று மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களும் நானும் ஏத்தாப்பூரில் எங்களது  வீட்டில் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் இல்லாததால் எங்க பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் நிலத்தையும், வீட்டையும் பிடுங்கிக்  கொண்டு துரத்தி விட்டார்கள். உறவினர்கள் யாரும் எங்களுக்கு உதவவில்லை.

டி.வி.,யில் எல்லா மக்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உதவி செய்வதைப்  பார்த்தோம். எங்களுக்கும் உதவி செய்வாங்க என்று நம்பி,நானும் என் பையன் கம்பர், என் மகள் காந்திமதியும் ரயில் ஏறி மெட்ராஸ்க்கு போனோம். இருட்டி விட்டதால் இரயில்வே ஸ்டேஷனிலேயே 3 பேரும் படுத்து உறங்கினோம். விடிந்ததும் எழுந்து பார்த்த போது என் மகள் காந்திமதியைக்  காணவில்லை. கதறி அழுது கொண்டு ஒவ்வொரு இடமாகத் தேடினோம். காணவில்லை. பிறகு தலைமை செயலகத்திற்குச்  சென்று விஷயத்தைச் சொல்லி அழுதோம். அங்கே எங்கள்  புகாரை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டாங்க.

என் மகள் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. எங்க போனதோ, யார் பிடிச்சுட்டுப்  போயிட்டாங்களோ என்று தெரியவில்லை. கடவுள் மாதிரி இருக்கிற முதலமைச்சர் அம்மா என் மகளை கண்டுபிடித்துத்  தர வேண்டும். நாங்க நிரந்தரமாக எங்க வீட்டில் குடியிருக்க முதலமைச்சர் அம்மா உதவி செய்ய வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் சரஸ்வதி.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம். விஜயகுமார்.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ