Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய ஒரு புத்தக திருவிழா!

ல்லா ஊர்களிலும் இப்போது புத்தக திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன. ஒரு புத்தக திருவிழாவின் மதிப்பை நிர்ணயிப்பது அங்கு வெளியிடப்படும் புதிய புத்தகங்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில்,  தமிழ்நாட்டில் இரண்டாவதாக அதிகமான புத்தகங்கள் வெளியிடப்படும் புத்தக திருவிழா என்றால், அது ஈரோடு புத்தக திருவிழாதான்.

தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக நடைபெறும் இந்த புத்தக திருவிழாவின் சிறப்பே,  இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் இரண்டுமுறை இங்கு வருகை தந்ததுதான் .அவர் இந்த புத்தக திருவிழா அரங்க மேடையில் ஓர் கனவு கண்டார், 'அனைவரும் தனது வீட்டில் ஒரு சிறு நூலகத்தை ஏற்படுத்திட வேண்டும்' என்று.

எது எதற்கோ மாரத்தான் ஓட்டம் நடைபெறும். ஆனால் முதல் முறையாக கலாமின் கனவை நனவாக்கிட,  படிக்கின்ற ஆர்வத்தை தூண்டிட,  'ஈரோடு வாசிக்கிறது' என்று அச்சடிக்கப்பட்ட வெண்ணிற டி சர்ட்டோடு,  சில  ஆண்டுகளுக்கு முன்பு, 12,500 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஓடிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பங்கு கொண்ட அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது இதன் சிறப்பம்சம்.

 

2014 ம் ஆண்டு இரண்டாவது முறையாக இங்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன் முன்னால் திரண்டு  இருந்த மாணவ மாணவியர்களை ஒரு உறுதி எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி,  'வாசிப்போம்... சுவாசிப்போம்' னு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

சரித்திரம் படைத்திட, தனித்துவமிக்க ஒரு முயற்சியாக,  இந்த ஆண்டு 20,000 மாணவர்கள் , பொதுமக்கள்  பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கடந்த 7 ம் தேதியன்று, ஞாயிற்றுக்கிழமை வ உ சி பூங்காவில்  நடந்தது . மக்கள் சிந்தனை பேரவை தலைவர்  ஸ்டாலின் குணசேகரன் தலைமையில்,  'கலாம் மேல் ஆணையாக வீட்டுக்கொரு நூலகத்தை அமைப்போம்' னு உறுதி ஏற்றனர். 

ஈரோடு மாவட்டத்தினர் கனவு கண்டார்கள் இப்போது செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மாவட்டங்களும் இதே கனவைக்கண்டு, செயல்படுத்தட்டும். 

ச.செந்தமிழ் செல்வன், நா. மகாலட்சுமி
படங்கள் : கோ.ப. இலக்கியா

( மாணவ பத்திரிகையாளர் )

எடிட்டர் சாய்ஸ்

MUST READ