Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாடைகளை துவைக்க மறுத்ததற்கு மெமோ: மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவு!

கோவை : சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்வம், உள்ளாடைகளை  துவைக்க மறுத்த அலுவலக உதவியாளரான பெண் ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு  மாநில மனித உரிமை ஆணையத்திற்கு, தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய செல்வம், உள்ளாடைகள் உள்ளிட்ட துணிகளை துவைக்குமாறு‌ அலுவலக உதவியாளரான வசந்தி என்ற பெண்ணிடம் கூறியபோது, அதற்கு வசந்தி மறுத்துவிட்டதாகக்  கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மெமோ ஒன்றை வசந்திக்கு நீதிபதி செல்வம் வழங்கி இருந்தார்.

அதில், 'உள்ளாடையைத்  துவைக்க மறுத்ததற்கும், நீதிபதியின் மனைவியை எதிர்த்துப்  பேசியதற்கும், ஏன் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது' என அந்த நீதிபதி செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, கடந்த பிப்ரவரி மாதம் 4 ம் தேதியிட்டு, நீதிமன்ற அலுவலக உதவியாளர் வசந்தி அளித்திருந்த சமாதான விண்ணப்பத்தில், வருங்காலங்களில் இதுமாதிரியான புகார்கள் வராமல் பார்த்துக் கொள்வதாகக்  கூறி இருந்தார். இந்த இரு கடிதங்களின் நகல்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து, மக்கள் சிவில் உரிமை கழகம் மாநில செயலாளர் ச.பாலமுருககன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை  நடத்தக்கோரி மனு அளித்திருந்தார். இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்து, விசாரணை அறிக்கையைச்  சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல்களை மனுதாரரான வழக்கறிஞர் பாலமுருகனுக்கு தேசிய மனித ஆணையம் அனுப்பி உள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையம் விரைவில் இதுகுறித்து விசாரணையைத்  தொடங்கும் என மக்கள் சிவில் உரிமைக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

மீன் குழம்பு வைக்கவில்லை, உள்ளாடையைச் சரியாகத் துவைக்கவில்லை என மெமோ கொடுக்கும் விவகாரம் இத்தோடு நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


- ச.ஜெ.ரவி
படம் : தி.விஜய்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close