Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூடங்குளம் அணு உலை: மோடி, ஜெயலலிதா கூட்டாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர்!

சென்னை: கூடங்குளம் அணு உலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டாக அதனை அர்ப்பணித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியபோது, ''அணு மின்சாரம் என்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. தமிழகம் போன்ற வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு அணு மின்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கூடங்குளம் அணு உலை இந்தியா ரஷ்யாவின் உறவில் ஒரு மைல் கல். கூடங்குளம் அணுஉலை செயல்படுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தது.

கூடங்குளம் அணு உலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கூடங்குளம் அணு உலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளம் அணு உலையில், உள்ளூர் மக்களின் போராட்டம் காரணமாக மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கூடங்குளத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது. கூடங்குளத்தில் 2வது அணு உலையின் செயல்பாடுகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பிரதமர் மோடி உரை...

இதேபோல், புதுடெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, வணக்கம் என்று கூறி தனது உரையைத் துவக்கினார். தொடர்ந்து, நெல்லையில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் 'மிக்க மகிழ்ச்சி' என்று தமிழில் கூறி பலத்த கரகோஷத்தை பெற்றார்.

மேலும் அவர் உரையாற்றும்போது, ''இந்தியாவில் சுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கியமான இணைப்பு கூடங்குளம் அணு உலை. பசுமை வளர்ச்சிக்கான கூட்டு தடங்களை உருவாக்குவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பின் அடையாளமாக கூடங்குளம் திகழ்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம், இந்தியா-ரஷ்யா உறவில் மற்றுமொரு மைல்கல். 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஒரே அணு உலை என்ற அளவில், இது இந்தியாவிலேயே மிகப்பெரிய அணு உலை என்ற பெருமையைப் பெறுகிறது.

இந்தியா-ரஷ்யா இடையேயான நட்பைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது. ரஷ்ய மற்றும் இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் புதினும் இணைந்து அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவில் மேலும் 5 அணு உலைகள் ஒவ்வொன்றும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு என ஒரு தொலைநோக்கு பார்வை உள்ளது. இந்தியாவில் காற்று மாசற்ற எரிசக்தியை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளேன்" என்றார்.

ரஷ்ய அதிபர் புதின்...

ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றும்போது, ''இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் மிகப்பெரிய நிகழ்வு. கூடங்குளம் அணு உலையானது, அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட ரஷ்ய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது.

அணு மின் நிலையத்தில் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எங்கள் நாட்டின் தொழில்நுட்பங்களை இந்திய வல்லுநர்களுடன் பகிர்ந்துகொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ