Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'என் ரயில் கதை': பயண நினைவுகளை பகிரச் சொல்லும் இந்திய ரயில்வே!

யில் பயணங்கள்  என்பது பலருக்கு தினமும் நடக்கும் ஒரு சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு சிறந்த அனுபவம். அதுவும் இந்தியாவை போன்ற ஒரு தொன்மைவாய்ந்த நாட்டில், பல்வேறு விதமான அனுபவங்களை தருவதாகவே  ரயில் பயணங்கள் திகழ்கின்றன.

நம்முடன் பயணம் செய்தவரின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவருடன் பேசத் தொடங்கி, காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி, தினமும் ரயிலில் பழங்கள் விற்கும் பாட்டிக்கு அன்பு பேரனாக இளைஞர்கள் மாறுவது வரை, இந்தியர்களுக்கு ரயில் பயணங்கள் பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளன. அந்த அனுபவங்கள் அனைத்துமே நம் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றிருப்பவை.

அந்த நினைவுகளை நம் மனதிலேயே அசைபோட்டுக் கொண்டிருக்காமல்,  பல்லாயிரக்கணக்கான மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இந்திய ரயில்வே பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

ரயில் பயணங்களின் இனிமையான அனுபவத்தை பிரபலமாக்கும் நோக்கத்துடன், இந்திய ரயில்வே இந்த புதுச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'என் ரயில் கதை' என்ற இந்த சேவையின் மூலம், இனி பயணிகள் தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் சமூக வலைதளங்களில் #MyTrainStory என்ற ஹாஷ் டாக்கை பயன் படுத்தி பகிரலாம். அல்லது பயணிகள் தங்கள் ரயில் பயணக்கதையை trainstory@gmail.com என்ற இ மெயில் ஐ .டிக்கு அனுப்பி வைக்கலாம். சக பயணிகள் படிக்கவும், நம்மை பற்றி நாமே எழுதும் ஒரு சுவையான அனுபவம் கிடைக்கவும் இந்த சேவை மிகவும் பயன்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் 'ரயில் பந்து' பத்திரிகையில் வெளியிடப்படும். சிறந்த கட்டுரைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று சிறந்த கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுகுறித்து பேசிய மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர், "மக்கள் தங்களது ரயில் பயணங்களை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பிகிறோம். புகைப்படங்கள், காணொளிகள் மூலமாகவும் மக்கள் அனுபவங்களை பகிரலாம். தினமும் இரண்டரை கோடி மக்கள் ரயில்களை பயன்படுத்துகிரார்கள். முதல் முறை மாநிலம் தாண்டி பயணம் செய்தது, தங்களின் வாழ்க்கை துணையை முதன் முதலில் ரயிலில் சந்தித்தது போன்ற சுவையான அனுபவங்களை மக்கள் அனைவரிடமும் பகிரக் கூடும்." என்றார்.


சக்கர ராஜன். ம
(மாணவர் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ