Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறப்புடன் பணியாற்றிய 14 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: ஜெ.உத்தரவு!

சென்னை: தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 14 போலீஸ் அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி சிறப்புப் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக  தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

" சுதந்திர தினத்தையொட்டி 14 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்வரும் காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப்பதக்கங்களை வழங்கிட, முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

1. எஸ்.அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, அயல்பணி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. என்.சிலம்பரசன், காவல்துணைக் கண்காணிப்பாளர், திண்டிவனம் உட்கோட்டம்.
3. மா.விவேகானந்தன், காவல்துணைக் கண்காணிப்பாளர், உடுமலைப்பேட்டை உட்கோட்டம்.
4. மு.சோமசுந்தரம், காவல்துணைக் கண்காணிப்பாளர், வாழப்பாடி உட்கோட்டம்.
5.
எஸ்.ஸ்ரீமதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.
6.
டி.சரவணக்குமார், காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, இராமநாதபுரம் மாவட்டம்.
7.
அ.தர்மலிங்கம், காவல் ஆய்வாளர், தனிப் பிரிவு, விருதுநகர் மாவட்டம்.
8. த.ஜோதி, காவல் ஆய்வாளர், தொடர் குற்ற குழு, கோயம்புத்தூர் மாநகர்.
9.
ரே.ஹேமலதா, காவல் ஆய்வாளர், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்சி மாவட்டம்.

இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்- அமைச்சர் ஆணையிட்டுள்ளார்:

1. ஜே.கே.திரிபாதி, காவல் துறை கூடுதல் இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு.
2. என்.கே.செந்தாமரை கண்ணன், காவல் துறை தலைவர், வடக்கு மண்டலம்.
3. செந்தில்குமார், காவல் துறை துணைத் தலைவர், தஞ்சாவூர்சரகம்.
4. மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் மாவட்டம்.
5. சி.பாஸ்கர், காவல் துணைக் கண்காணிப்பாளர், கும்பகோணம் உட்கோட்டம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள விருதுகள், முதல்வர்  பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close