Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உண்மையான சுதந்திரம் எது?... தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா சுதந்திர தின உரை!

சென்னை : 'இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு' என சுதந்திர தினத்தையொட்டி இன்று கோட்டையில் கொடி ஏற்றி பேசுகையில் தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு சுதந்திர தின உரையாற்றிய ஜெயலலிதா, 'அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழகத்திற்கு முக்கிய பங்குண்டு. தமிழகத்தில் விடுதலை வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன்.

டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன்பே இங்கு தேசியக்கொடியை ஏற்றியவர் வாஞ்சிநாதன். உண்மையான சுதந்திரம் என்பது பொருளாதார சுதந்திரத்தில்தான் உள்ளது. அனைவரும் சமம் என்பதில்தான் உண்மையான சுதந்திரம் உள்ளது. சிறந்த கல்வி, சிறப்பான பொருளாதாரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம்.

தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகள் குடும்பத்திற்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும்' என்று கூறினார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ