Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட்... தற்காலிகமாக நிறுத்தி வைத்தது பார் கவுன்சில்!

சென்னை: 126 தமிழக வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

1961 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34(1)ல்,  சென்னை உயர் நீதிமன்றம்  சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு எதிரானது எனவும், அதை திரும்பப் பெறவேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும், வழக்கறிஞர் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக்கோரி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த இந்திய பார் கவுன்சில் கூட்ட தீர்மானத்தின்படி, தமிழக வழக்கறிஞர்கள் 126 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

சட்டத் திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தி வைத்த அவர்கள் பணிக்கும் திரும்பினர்.


இந்நிலையில் தமிழக பார் கவுன்சில் முறையீட்டை அடுத்தும், வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதாலும், 126 வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை தற்காலிகமாக இந்திய பார் கவுன்சில் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், வழக்கறிஞர்கள் நன்னடத்தை உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, வழக்கறிஞர்கள் மீதான தடையை முழுவதுமாக நீக்குவது பற்றி வருகின்ற 22ம் தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ