Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயிலில் ரூ.6 கோடி கொள்ளை: போலீஸ் ஆணையரிடம் விசாரணை அறிக்கை அளிப்பு

சேலம்: சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளைபோன சம்பவத்தின் விசாரணை அறிக்கை, போலீஸ் கமி‌ஷனரிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது.

சேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி சென்னை சென்ற எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி பணத்தை ரயில் கூரையை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் ஏ.டிஜி.பி. கரன்சின்கா தலைமையில் போலீஸ் சூப்பிரெண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம் மாநகர போலீசார் என பல குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள், சேலம், சேலம் டவுன், ஆத்தூர், விருத்தாசலம் ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள், பார்சல் அலுவல ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போர்ட்டர்கள், டீ, காபி விற்பவர்கள் உள்பட பலரை அழைத்து விசாரித்துள்ளனர். இதேபோல், பணப்பெட்டி சென்ற எழும்பூர் எக்ஸ்பிரெஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை எந்த தடையமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

மேலும், பணப்பெட்டிக்கு பாதுகாப்பாக சென்ற சேலம் மாநகர உதவி ஆணையர் நாகராஜன் உள்பட 9 பேரிடமும் சிறப்பு புலனாய்வு அதிகாரியான அமித்குமார் சிங் விசாரணை நடத்தி உள்ளார். அவர்கள் 9 பேரும் தெரிவித்த தகவல்களை பதிவு செய்த அமித்குமார் சிங், அதனை அறிக்கையாக தயார் செய்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே சேலம் மாநகர துணை கமி‌ஷனர் செல்வராஜ், உதவிக் கமி‌ஷனர் நாகராஜன் உள்பட 9 பேரிடமும் விசாரணை நடத்தி அவரும், விசாரணை அறிக்கையை சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமாரிடம் சமர்பித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ