Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' தி.மு.க இல்லாவிட்டால், நாங்கள் எதற்கு?' -சபையைப் புறக்கணிக்கும் காங்கிரஸ்

ட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள் தி.மு.க உறுப்பினர்கள் . ' அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்' எனக் கொந்தளிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி.

சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணம் குறித்து, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சித்ததால் சட்டப்பேரவையில் கொதித்தனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியே கொண்டு வந்தனர் அவைக் காவலர்கள். 'ஒருவாரம் தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால்.  அதேநேரத்தில், சபையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் நீக்கம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏவிடம் பேசினோம். " சபையை நாகரிகமாக நடத்துவதற்கு ஆளுங்கட்சி தயாராக இல்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. இன்றைக்கும் அ.தி.மு.க உறுப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க உறுப்பினர்கள் சபைக்குள் இருக்கத்தான் விரும்பினர். வெளிநடப்பு செய்யாமல் இருந்தவர்களை சபையை விட்டு ஒருவாரம் நீக்கியிருப்பது சரியானதல்ல.

இன்னும் நான்கு நாட்களில் காவல்துறை மானியக் கோரிக்கை நடக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் சபையை நடத்தவே அ.தி.மு.க விரும்புகிறது. நாளை சபை கூடியதும், ' தி.மு.க உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவை நீக்குமாறு' பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் பலத்திற்கும் தி.மு.க உறுப்பினர்கள் பலத்திற்கும் குறைந்த அளவுதான் வித்தியாசம்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவைத் தவிர்த்து, நாங்கள் எட்டு உறுப்பினர்களும், முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ஒரு உறுப்பினரும் இருக்கிறோம். எதிர்க்கட்சி இல்லாமல் முக்கியமான மானியக் கோரிக்கைகளை நடத்துவது தவறானது. அப்படிச் செயல்பட்டால் அது சட்டசபையாக இருக்காது. தி.மு.க உறுப்பினர்களின் நீக்கத்தை ரத்து செய்யாவிட்டால், நாங்களும் சபையைப் புறக்கணிப்போம். அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அவர்கள் சபையை நடத்திக் கொள்ளட்டும்" என்றார் கொந்தளிப்போடு.

-ஆ.விஜயானந்த்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ