Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட அதிபர் மதன் காணாமல் போன விவகாரம்! - பாரிவேந்தரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதன் விவகார வழக்கில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28ம் தேதி மாயமானார். அவர் மாயமானதும், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் மருத்துவ சேர்க்கைக்கு பணம் கொடுத்து ஏமாந்த பலர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். புகாரில் எஸ்.ஆர்.எம்.  குழுமத் தலைவர் பாரிவேந்தர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மதனை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் தங்கம், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது. மதன் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது.

வழக்கு விசாரணை நேற்று (ஆகஸ்ட் 17ம் தேதி) நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் முன்னிலையில் வந்தது. அப்போது மதன் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று போலீசாருக்கு நீதிபதிகள் எச்சரித்தனர். அதோடு விசாரணை அறிக்கையை நாளை (இன்று) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தங்கம் தரப்பு வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷ் கூறுகையில், "மதன் வழக்கில் பாரிவேந்தர் மற்றும் ரங்கபாஷ்யம், சுகுமாறன் ஆகியோரிடம் ஏன் விசாரிக்கவில்லை என்று போலீஸாரிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு போலீஸ் தரப்பில் சரியான பதிலளிக்கவில்லை. தமிழக போலீஸாரிடமிருந்து இந்த வழக்கை வேறுபிரிவுக்கு மாற்றினால் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இன்று நடந்த விசாரணையில் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் 24 மணி நேரத்துக்குள் ஆஜர்படுத்த வேண்டும். அதோடு பணம் வாங்கி, மோசடி செய்த வழக்கில் பாரிவேந்தரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

- எஸ்.மகேஷ்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ