Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க.வினர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது! - சபாநாயகர் உறுதி

சென்னை: தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை 1 வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நேற்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை, பேரவை வளாகத்திற்குள் நுழைய அவைக் காவலர்கள் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  ஸ்டாலின், துரைமுருகன் உட்பட திமுக உறுப்பிர்கள் அனைவரும் பேரவையின் 4-ம் எண் வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், " பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது தி.மு.க. உறுப்பினர்களின் நோக்கம் இல்லை. அதே நேரம், எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்லk கூடாது என எங்களை தடுப்பதில் எந்தவித நியாயமும் இல்லை" என குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் சட்டபேரவை இன்று கூடியதும், தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் தனபால், ''தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நடவடிக்கைக்கு காரணம் தி.மு.க. உறுப்பினர்களே. அவர்கள்தான், என்னை இந்த நடவடிக்கைக்கு தள்ளினர். அவையின் நேரத்தை வீணடிப்பதே தி.மு.க.வின் வேலையாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், துணைத்தலைவரும் இந்த பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்" என்றார்.

மேலும், தி.மு.க.வினர் ஒருமையில் பேசியபோதும் அதை கண்டுகொள்ளாமல் அவை நடத்தப்பட்டது என்று விளக்கம் அளித்த பேரவைத்தலைவர் தனபால், சட்டப்பேரவையில் விதி 121-ன்படி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியே அவை நடப்பதாகவும்" குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து,  தி.மு.க. உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க., ( சஸ்பெண்ட் செய்யப்படாதவர்கள்),  காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ