Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் தலைவர்!


டந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எதிர்பார்த்த அளவுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை எனக் கூறப்பட்டது. அதற்குக் காரணம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் என்று சிலர் டெல்லி தலைமையிடம் தெரிவிக்க, அதனையடுத்து அவரை ராஜினாமா செய்யுமாறு டெல்லி தலைமையகம் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. இதற்கு தார்மிக பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஜூன் 25-ம் தேதி  தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டிக்கு பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார், திருநாவுக்கரசர் ஆகியோர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி தலைமையகம், தமிழகத்தில் உள்ள சில முக்கிய நபர்களை அழைத்துப் பேசியது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  நியமனம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு நியமிக்கவில்லை என்றால், உள்ளாட்சித் தேர்தல்வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கவனிப்பில் சத்தியமூர்த்தி பவன் இருக்கும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால், தமிழக காங்கிரஸின் சில முக்கியப் பிரமுகர்கள் டெல்லியில் முகாமிட்டுருப்பதாகக் கூறப்படுகிறது.

''காங்கிரஸில் உள்ள சிலரோ, தலைவர் நியமிக்கப்படவில்லை என்று பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்து, அதை மேலிடத்துக்கும் அனுப்பி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். உண்மையில், பீகாரில் ஒரு வருடம் தலைமை நியமிக்கப்படமால்தான் இருந்தது. அதேபோன்று, இங்கும் நியமிக்கப்படாத வரை சண்டை, சச்சரவுகள் என்பது குறைவாகத்தான் இருக்கும்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ