Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''ஜெ., சட்டமன்றத்தை போயஸ் தோட்ட சமையல் அறையில் நடத்தலாம்!'' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

த்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ராஜிவ் காந்தியின் 72-வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ராஜிவ் காந்தி பிறந்த நாளில் ஒற்றுமையாகப் பங்கேற்ற நிர்வாகிகள்!

ராஜிவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, 'ராஜிவ் இன்றிருந்திருந்தால்...' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, விஜயதரணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒரே மேடையில் பங்கேற்றிருந்தனர். இளங்கோவனும் திருநாவுக்கரசரும் அருகருகே அமர்ந்திருந்தனர். சிதம்பரமும், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் வராதபோதும், அவர்களுடைய ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

இதில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ''தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில் எந்த நியாயமும் இல்லை. இது, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் நடவடிக்கை. அது, ஜெயலலிதாவின் உத்தரவுதானே  தவிர, சபாநாயகரின் உத்தரவு கிடையாது. ஜெயலலிதா, சட்டமன்றத்தை போயஸ் தோட்டத்தின்  சமையில் அறையில் நடத்தலாம். மீண்டும் அராஜகமான ஆட்சியைத்தான் அவர் நடத்திவருகிறார். அவர் திருந்தவே இல்லை. சபாநாயகர் வில்லன்போல் இருக்கிறார் என்றால், அவரது நடவடிக்கைகளும் வில்லத்தனமாக உள்ளது. அகதிகள் முகாமில் உள்ளவர்களை விஷ ஊசி செலுத்திக் கொன்றிருப்பதாகக் கூறப்படும் சம்பவத்தில், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கொலை வழக்கைப் பதிவுசெய்ய வேண்டும். தீவிரவாதிகளுக்கு நிகரான தண்டனையை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.  
 

காங்கிரஸ் தலைவர் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு!

காங்கிரஸ் தலைவர் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படுவார்கள். அதுகுறித்த தகவலை டெல்லி தலைமையகம் அறிவிக்கும். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்  அனைவருமே தலைவர்கள்தான். நான் ராஜினாமா செய்ததால் மீண்டும் என்னைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை. உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க கூட்டணியுடன் காங்கிரஸ்  தேர்தலைச் சந்திக்கும். 'உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை' என்று சிதம்பரம் சொன்னதாக வருகின்ற செய்திகளில் உண்மையில்லை. நான் சிதம்பரத்துடன்  பேசவில்லை என்றாலும், அவரிடம் இருப்பவர்களிடம் பேசினேன். அவர்கள், 'அவ்வாறு சிதம்பரம் சொல்லவில்லை' என்று சொன்னார்கள்.  

ஜி.கே.வாசன் தவற்றைத் திருத்திக்கொண்டு வரவேண்டும்!

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் சேருவதைத் தவிர, வேறு வழியில்லை. அவர் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு வந்தால், காங்கிரஸ் தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்'' என்றார்.  

போட்டோவுக்கு ஏற்பாடு செய்த விஜயதரணி!

 

ராஜிவ் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யவந்த தலைவர்களைப் படம்பிடித்தபோது, அங்கு நின்றிருந்த போட்டோகிராபர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைக் கண்ட விஜயதரணி, படம்பிடிப்பதற்கு வசதியாக போட்டோகிராபர்களை ஒழுங்குபடுத்தினார். பின்னர் ஒவ்வொரு தலைவர்களையும் வரவழைத்து மரியாதை செய்யவைத்தார். அதன்பிறகு, போட்டோகிராபர்களும் அமைதியாகப் படங்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.
 
எந்த மோதலும், எந்த வசைபாடலும் இல்லாமல் நடந்து முடிந்தது ராஜிவ் காந்தி பிறந்த நாள் விழா!

- கே.புவனேஸ்வரி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ