Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏறி சரியும் தக்காளி விலை! என்ன செய்யலாம்?

க்காளியின் விலைக் கடுமையாகச் சரிந்து, பயிரிட்ட விவசாயிகளின் நிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.தமிழகம் மட்டுமில்லாது,ஆந்திரா,கர்நாடகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அதிக விளைச்சல் காரணம் என்று கூறப்பட்டாலும் முறையான அரசு நடவடிக்கை,அறிவுறுத்தல் இல்லாத நிலையால் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதே வீழ்ச்சி இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று(வெள்ளி) கர்நாடக  மாநிலம் மைசூரு மார்க்கெட் பகுதியில் ஒருகிலோ தக்காளி ரூ.2 முதல் 3 வரை விற்றுள்ளது.இதனால் மனம் வெதும்பிய விவாசயிகள் டன்  கணக்கில் தக்காளியை சாலையோரத்தில் வீசிவிட்டுச் சென்றனர்.அதே போல சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தக்காளி விவசாயிகள் குப்பையில்,பல நூறு கிலோ தக்காளியை வீசிவிட்டுச் சென்றனர். சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் ஒட்டன் சத்திரத்தில் டன் கணக்கிலான தக்காளி சாலையோரத்தில் வீசப்பட்டது. இப்படி அடிக்கடி  தக்காளி வீசப்படுவது நடக்கிறது.

விலை குறைந்தாலும் பாதிக்கப்படுவது விவசாயிதான்,விலை கடுமையாக ஏற்றம் காணும்போதும் லாபம் பார்க்காமல்  நஷ்டமடைவது விவசாயிதான் என்பது யதார்த்த நிலை. இந்த முரண்பாடான நிலையை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக  நடவடிக்கை எடுத்து விவசாயிகளைப்  பாதுகாக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

சென்னையில் கடந்த ஜூன் மாதம் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்றது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அதிக வெயில் காரணமாக தக்காளி செடிகள் கருகி விட்டதால் தக்காளியின் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விலையேற்றம் என்று காரணம் சொல்லப்பட்டது. அந்த விலைஉயர்வு சென்னை மட்டுமல்லாது, மும்பை,கொல்கொத்தா,புதுடெல்லி, என்று  இந்தியா முழுக்க எதிரொலித்தது. விளைச்சல் குறைவு என்றாலும்,பதுக்கல் காரணத்தினாலும் விலை உயர்வு ஏற்பட்டாதாக புகார்கள் எழுந்தன.

தக்காளி பதுக்கினால் நடவடிக்கை!
 
இதனையடுத்து  மத்திய அரசும்,மாநில அரசும் பல கட்ட ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பதுக்கல்காரர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை  எடுக்க உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அரசுகளின் நடவடிக்கைகள்  தீவிரமானதால்  ஒரு வாரத்திலேயே தக்காளியின் விலை கட்டுக்குள் வந்தது. ரூ.100லிருந்து ரூ.35க்கு குறைந்தது.

ஆனால் இப்போது வேறு நிலை. அதிக அளவிலான தக்காளி விளைச்சல்,கொள்முதல் செய்வதில் வியாபாரிகளிடம் ஆர்வமின்மை  சூழல் நிலவுவதால், தக்காளியை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை கடும் பாதிப்பில் இருக்கிறது.தமிழ் நாட்டில் மட்டுமல்ல,கர்நாடகத்திலும் இதே நிலைதான்,ஆந்திராவிலும் இதே நிலைதான் என்கிறார்கள் விவசாயிகள். அதனால் நேற்று(வெள்ளி) மைசூரு மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கும் ரூ.3க்கும் விற்கப்பட்டது.

இதனால் கடுமையான பொருளாதாரா இழப்பைச் சந்தித்த அம்மாநில  விவசாயிகள் 'டன்' கணக்கிலான தக்காளியை சாலையில் வீசிவிட்டுச் சென்றனர் வேதனையோடு. சில வாரங்களுக்கு  முன்பு தமிழ் நாட்டிலும் ஒட்டன்சத்திரம், சேலம் போன்ற பகுதிகளில் தக்காளி விவசாயிகள் இதே போல தக்காளியை சாலையோரத்தில் வீசி சென்ற செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தச் சூழல் தற்போது மீண்டும்  ஏற்பட்டுள்ளது தக்காளி விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் தீர்வு?

தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.100 என்றும் ரூ.120 என்றும் விற்றபோதும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை; ஆனால் விலை சரிவின்போது விவசாயி கடுமையாகப் பாதிக்கப்படுகிறார் என்கிற முரண்பாடு ஏன் நிலவுகிறது,இதனைத் தவிர்க்க வழியே இல்லையா என்று தக்காளி விவசாயிகள், வியாபாரிகளிடம் விசாரித்தோம்.அவர்கள் கூறியதாவது;

"சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை  ஏக்கர் கணக்கில் தக்காளி பயிர் செய்துள்ளனர்.இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 80 லாரிகளில் தக்காளி லோடு வருகிறது.ஒரு வாரத்திற்கு முன்பு வரை 40 லோடு மட்டுமே வந்தது. இதனால் இப்போது  கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 6 க்கு விற்பனையாகிறது.வடஇந்தியாவுக்கு தக்காளி கொட்டிண்டு செல்லப்பட்டு விற்கப்படுவதால் இங்கே கொஞ்சம் விலை கிடைக்கிறது. இல்லையென்றால் இந்த விலையும்கூட கிடைக்காது.சித்தூர் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரி,திண்டுக்கல், ஆற்காடு பகுதி தக்காளி விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நேரத்திலதான் மத்திய மாநில அரசுகள் சரியான முடிவெடுத்து தக்காளி விலையை சீராக்கவும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் முன் வரவேண்டும். அப்போதுதான் விலை கடுமையாகச் சரிவு அடையும்போது விவசாயிகள் பாதிப்பது தடுக்கப்படும்." என்றனர்.

 - தேவராஜன்


  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ