Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரஸ் கட்சிக்கு வாசன் மீண்டும் வந்தால் இணைத்துக்கொள்ள தயார்! - இளங்கோவன்

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஜி.கே.வாசன் மீண்டும் வந்தால் இணைத்துக்கொள்ள தயார் என்று இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி போடப்படுவதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையிருந்தால், தொடர்புடையவர்களை கொலைகாரர்களாக கருதி தண்டனை அளிக்க வேண்டும்.

 

காங்கிரஸ் கட்சிக்கு வாசன் மீண்டும் வந்தால் இணைத்துக்கொள்ள தயார். அவரை காங்கிரஸ் தொண்டர்களும் வரவேற்பார்கள். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி. நான் மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை" என்றார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close