Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பலி... அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு!

திருவள்ளூர்: திருத்தணி அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில், மர்ம காய்ச்சலுக்கு நான்கு குழந்தைகள் பரிதாபமாக‌ உயிரிழந்துள்ள சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதிக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் ‌மாவட்டம் திருத்தணி அருகே உள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் கடந்த 20 நாட்களி‌ல் மட்டும் மர்ம காய்ச்சலுக்கு நான்கு குழந்தைகள் பரிதாபமாக‌ உயிரிழந்துள்ளனர். மேலும் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் திருவள்ளூர்,திருத்தணி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து, காவேரிராஜப‌ரம் கிராமத்தில் 9 மருத்துவ ‌குழுக்கள் அமைக்கப்பட்டு சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி மற்றும்‌ நோய் தடுப்பு மருத்து‌வத்துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காவேரிராஜப‌ரம் கிராமத்தில் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவேரிராஜப‌ரம் கிராமத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு இயக்குனர் குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் உடல் நலம் சீராகி வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவிரிராஜபுரத்தில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்"என்றார்.

மர்ம காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ