Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சஸ்பெண்ட் செய்யப்படாத தி.மு.க. எம்எல்ஏ.க்கள் பேரவை புறக்கணிப்பு!

சென்னை: தி.மு.க. உறுப்பினர்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் வரை, எஞ்சிய 10 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி அமளியில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை 1 வாரம் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் இந்த சஸ்பெண்ட் உத்தரவு, இன்றுடன் 5 வது நாளாகும். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்படாத எம்எல்ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பூங்கோதை, கீதாஜீவன், காந்தி உள்ளிட்ட 10 பேரும் அவையை இன்று முதல் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.'

 

மேலும், 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யாததை அடுத்து, அவர்கள் அவைக்கு வர முடியாத நிலையை சபாநாயகர் முடிவு ஏற்படுத்தி உள்ளது. இதனால், நாங்களும் அவைக்கு வரவில்லை என தி.மு.க. கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ