Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரிகளைக் கண்டித்து கீழ்பவானி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

                       

வானி சாகர் அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு வாய்க்கால் மற்றும் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் ஆகிய இரண்டு தனித்தனி வாய்க்கால் மூலம், பவானி நதி நீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாசன நீர் நிர்வாகத்தில், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு கூடுதல் தண்ணீரை திறந்து விடுவதால், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதற்கு காரணமான ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகரிகளைக் கண்டித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சார்பில், இன்று ஈரோடு காளைமாடு சிலை அருகில் அட்டை தாங்கிய வாசகங்களுடன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 

                         

 

பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பவானி முறை நீர்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.காசியண்ணன் தலைமை தாங்கி பேசியதாவது, "காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி, ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 8 டி.எம்.சி.தண்ணீரும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்திற்கு 28 டி.எம்.சி. தண்ணீரும் திறந்து விடவேண்டும். ஆனால், பழைய ஆயக்கட்டுப் பாசனக்கரையில் நாள்தோறும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை சர்க்கரை ஆலை, காகித ஆலைகள், சாயப்பட்டறைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஏராளம் உள்ளதால், அந்த ஆலைகளின் தண்ணீர் தேவைக்காக, சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதல் தண்ணீரை பழைய ஆயக்கட்டுக்கால்வாயில் திறந்து விடுகிறார்கள். இதன் காரணமாக புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், 15 போகம் நிலக்கடலை சாகுபடியும், 8 போக நெல் சாகுபடியும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் இழந்துள்ளார்கள்" என்றார்.

    கீழ்பவானி பாசன விவசாயிகள் நலசங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி பேசும்போது, 'பழைய ஆயக்கட்டுப்பாசனம் பெறுகிற கொடிவேறி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் கரைகளில் உள்ள ஆலைகளின் பயன்பாட்டிற்காக பாசனத்தண்ணீர் மோட்டர் வைத்து உறிஞ்சப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளார்கள். இதனால் பாசன விவசாயிகளுக்குள் மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் கீழ்பவானி பாசனம் என்கிற புதிய ஆயக்கட்டில் உள்ள 2லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் பாசன உரிமை பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பவானி சாகர் அணை நீர் நிர்வாகத்தை உடனே மேற்கொள்ள வேண்டும்..இல்லையெனில் பாதிக்கப்பட்டுள்ள பவானி பாசன விவசாயிகள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்" என்றார்.

- ஜி.பழனிச்சாமி. படங்கள்: ரமேஷ் கந்தசாமி.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close