Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.பி.ஐ விசாரணையே தேவைப்படவில்லை..! விஷ்ணுபிரியா வழக்கில் தமிழக அரசு

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

திருச்செங்கோட்டைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் டிஎஸ்பி விஷ்ணுபிரியா. கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி விஷ்ணுபிரியா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் மேலதிகாரிகளின் தலையீடு காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிசிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு உயர்நீதிமன்ற தனி நீதிபதியால் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதோடு, விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை அடுத்த 3 மாதத்துக்குள் முடிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், விஷ்ணுபிரியா வழக்கில் சிபிசிஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவில் தெளிவான காரணங்கள் இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

சகாயராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ