Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயிலில் பணம் கொள்ளை... தடயங்கள் சிக்கியதாக சி.பி.சி.ஐ.டி. தகவல்!

சென்னை: ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தடயங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தகவல் தெரிவித்து உள்ளது.

சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் கடந்த 8-ம் தேதி புறப்பட்டு சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு மர்ம நபர்கள் 5.75 கோடி ரூபாயை கொள்ளை சென்றனர். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் ஏ.டிஜி.பி. கரன்சின்கா தலைமையில் போலீஸ் சூப்பிரெண்டுகள் நாகஜோதி, ராஜேஸ்வரி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சேலம் மாநகர போலீசார் என பல குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள், சேலம், சேலம் டவுன், ஆத்தூர், விருத்தாசலம் ரயில் நிலையங்களில் உள்ள ஊழியர்கள், பார்சல் அலுவல ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போர்ட்டர்கள், டீ, காபி விற்பவர்கள் உள்பட பலரை அழைத்து விசாரித்துள்ளனர். இதேபோல், பணப்பெட்டி சென்ற எழும்பூர் எக்ஸ்பிரெஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை எந்த தடையமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, சேலம் அருகே இருப்புப்பாதையில் புதிய தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், ரயிலின் மேற்கூரையை துளையிட பயன்படுத்தப்பட்ட கருவிகள், பொருட்களும் சிக்கி உள்ளன. தற்போது தடயங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து, 20 பேர் கொண்ட சிறப்புப்படையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ