Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளஸ்2 முடித்தவர்களுக்கு முதல்வரின் ஜாக்பாட்..! கதவை திறந்த கப்பல்படை

இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலை வாய்ப்பினை பெறும் வகையில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பி.இ. மாணவர்கள் ஐ.இ.எஸ் படிப்பில் சேர்வதற்கு ஏதுவாக பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார். இன்று பிளஸ் 2 படித்தவர்கள் கப்பல்படையில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் உதவிக்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், மீன்வளத் துறை சம்பந்தமாக 6 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 

"தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் மீனவ மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மீன் உணவுப் பொருட்களை தயாரித்திட அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும், பொதுமக்களுக்கு புரதச் சத்து நிறைந்த ருசியான தரமான மீன் உணவுப் பொருட்கள் கிடைத்திடும் வகையிலும், சுய உதவிக் குழு மகளிர் பயன்பெறும் வகையில் தங்கும் வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் மற்றும் உடனடியான சமையலுக்கும், உடனடியாக உண்பதற்கும் Ready to cook and Ready to eat என்பதற்கு உகந்த வகையில் கடல் மீன் உணவு வகைகளை தயாரித்திட ஒரு மைய சமையலறைக் கூடம் 8 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் காசிமேடு பகுதியில் அமைக்கப்படும். மேலும், கடல் மீன் உணவுகள் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில், நியாயமான விலையில், சென்னை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திட 1 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு நவீன நகரும் கடல்மீன் உணவகங்கள் Modern Mobile Restaurants அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

"மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் மீன்வளம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினை பெற்றிட ஏதுவாக பல்வேறு பயிற்சிகளையும், திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கப்பல்படையில் பணிபுரிவதற்கான உடற் தகுதி மற்றும் கடல்பயண திறமைகளை பெற்றிருந்தும், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள் முறையான வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் இல்லாததால், அந்த வாய்ப்புகளை பெற இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர்.

எனவே, மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதன் மூலம், அவர்கள் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படை ஆகியவற்றால் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடையது வேலை வாய்ப்பினை பெற இயலும். எனவே, ஆண்டு தோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இயத திட்டம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்" என்று ஜெயலலிதா அறிவித்தார்.

சகாயராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ