Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெரினா காற்றில் இனி கல்வியும் கற்கலாம்..! முதல்வரின் அடுத்த அதிரடி

 

மெரினா கடற்கரையில் ‘பாய்மரப் படகு அகாடமி’, ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம்’ அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், விளையாட்டு மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை அறிவித்தார்.

"எங்களது தேர்தல் அறிக்கையில் கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும் என நாங்கள் தெரிவித்துள்ளோம். அதனை செயல்படுத்தும் வகையில், உலகில் இரண்டாவது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் ‘பாய்மரப் படகு அகாடமி’ ஒன்று நிறுவப்படும். மேலும், ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம்’ ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் 7 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், நுணுக்கங்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் பயன்பெற ஏதுவாக மின்நூலகம் ஒன்று 2 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேசிய மாணவர் படைக்கென தனியாக எந்த விதமான பயிற்சி நிலையமும், இல்லை என்பதை கருத்தில் கொண்டு தேசிய மாணவர் படைக்கென தனியாக பயிற்சி அகாடமி ஒன்று 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தபடி மதுரை இடையாபட்டியில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளன. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேசிய மாணவர் படை வீரர்கள் மலையேறும் பயிற்சியில் தங்களை செழுமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக மலையேறும் பயிற்சிக்கான செயற்கை மாதிரி வடிவமைப்பு artificial rock climbing set up ஒன்று 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

சென்னை மாநகரின் மையப் பகுதியில் அமையதுள்ள சேத்துப்பட்டு ஏரி 42 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு பொழுது போக்கு தூண்டில் மீன்பிடிப்பு, நடைப் பயிற்சி பாதை, படகு குழாம், குழயதைகள் விளையாட்டுத் திடல், பன்மாடி வாகன நிறுத்தும் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய பசுமை பூங்கா உருவாக்கப்பட்டு, என்னால் 27.2.2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இப்பசுமை பூங்கா பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தினை செறிவூட்டிடும் விதமாகவும் அமைந்துள்ளது. பார்வையாளர்களை இப்பூங்காவிற்கு மேலும் ஈர்க்கும் நோக்கில், சூரிய மின்வசதியுடன் கூடிய மீன் காட்சியகம் மற்றும் குளிர்சாதன கவிகைமாடத்தில் Dome-ல் முப்பரிமாண காணொளிகளை காட்சிப்படுத்தும் மெய்நிகர காட்சியகமும் Virtual Reality Centre 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் நடப்பாண்டில் அமைக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சகாயராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ