Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

14 விநாடியா...பத்து விநாடி உற்றுப் பார்த்தாலே குற்றம்தான்...! பெண்கள் ஆணையம் அதிரடி

பெண்களை 14 விநாடிகள் அல்ல, 10 விநாடிகள் உற்றுப்பார்த்தாலே குற்றம்தான் என்று தேசிய மகளிர் நல ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறினார்.

கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங், கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 விநாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில்  சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்னை வந்த தேசிய மகளிர் நல ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பெண்களை 14 விநாடிகள் அல்ல; 10 விநாடிகள் உற்றுப் பார்த்தாலே குற்றம்தான் என்று கூறினார்.

மேலும், எல்லா சமூக பெண்களுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ