Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி அதிகாரி மீது ஆசிட் வீச்சு ஏன்? பரபர பின்னணி

சென்னையில் வருமானவரி அதிகாரி மீது ஆசிட் வீசிய வழக்கில் துப்பு துலங்கியதாக தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், வருமான வரித்துறை அதிகாரி மோஷித் நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ்அப்பில் நீண்ட நேரம் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் நம்பருக்கு அதிக நேரம் சேட்டிங் செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர் மகேந்தர்பதக். இவரது மகன் மோஷித் (23). ஹாக்கி வீரரான இவருக்கு கடந்த ஆண்டு வருமான வரி அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகமான ஆயகர்பவனில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அண்ணாநகரில் உள்ள மத்திய வருவாய் குடியிருப்பில் மோஷித் 2 பேருடன் தங்கி இருந்தார். ஆகஸ்ட் 23ம் தேதி இரவு 9 மணியளவில் மோஷித்வுடன் தங்கி இருந்தவர்கள் சாப்பிட சென்றனர். மோஷித் மட்டும் தனியாக இருந்த போது வீட்டின் ஹாலிங் பெல் அடித்தது. இதனால் கதவை அவர், திறந்த போது ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் மோஷித் மீது ஆசிட்டை வீசினான். முகத்தில் ஆசிட் பட்டதும் அவர் பின்புறம் திரும்பினார். இதனால், அவரது முதுகிலும் ஆசிட்டை வீசிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினான். உடல் முழுவதும் ஆசிட் பட்டதால் மோஷித் அலறினார். பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரித்து வருகிறார். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆசிட் வீசிய சம்பவத்தில் சி.சி.டி.வி கேமரா மூலம் எங்களுக்கு முக்கிய தடயம் சிக்கியுள்ளது. ஆசிட் வீச இரண்டு பேர் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளனர். ஒருவர் மட்டுமே வீட்டின் கதவை தட்டி ஆசிட் வீசியுள்ளார். அடுத்தவர், கீழே மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளார். இந்த காட்சி பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். மோட்டார் சைக்கிளின் எண்கள் கேமரா பதிவில் சரியாக தெரியவில்லை. இருப்பினும் முதல்கட்டமாக மோஷித்தின் செல்போன் நம்பரை ஆய்வு செய்ததில் நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ்அப்பில் அவர் நீண்ட நேரம் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் நம்பருக்கு அதிக நேரம் சேட்டிங் செய்து வந்துள்ளார். தற்போது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அந்த நம்பருக்கு சொந்தமானவரை பிடித்து விசாரித்தால் ஆசிட் வீச்சுக்கான காரணம் தெரியவரும். மேலும், அலுவலகத்தில் யாருடன் மோதல் காரணமாக இந்த ஆசீட் வீச்சு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் குற்றவாளி பிடிபடுவார்கள்"என்றார். 

எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ