Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரவுண்ட் கட்டப்படும் ரயில் கொள்ளையர்கள்..! ஆர்பிஎஃப் தயாரித்த அதிரடி லிஸ்ட்

சென்னை ரயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 14 கொள்ளையர்களின் பட்டியலை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் கொடுத்தனர்.

சேலத்திலிருந்து ஆகஸ்ட் 8ம் தேதி சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் 5.75 கோடி ரூபாய் கொள்ளைப் போனது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொள்ளை நடந்த இடம், கொள்ளையர்களின் உருவம் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லாமல் போலீஸாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உதவும் வகையில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படையினர் தமிழகம், மும்பை, கொல்கத்தா ஆகியவற்றில் ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில் கொள்ளை வழக்கு விசாரணை எங்களிடம் இருந்து ரயில்வே போலீஸ் மூலம் சி.பி.சி.ஐ.டி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாங்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம். தற்போது இதுவரை நடந்த ரயில் கொள்ளை குறித்த விவரத்தை சேகரித்து அதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பட்டியலை தயாரித்துள்ளோம். அதில் முக்கியமான கொள்ளையர்கள் 14 பேர் பட்டியலை சி.பி.சி.ஐ.டி போலீஸிடம் கொடுத்துள்ளோம். இதன்மூலம் ரயில் கொள்ளையில் துப்பு துலங்க வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்" என்றார். 

சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "இந்த கொள்ளை தொடர்பாக எங்களிடம் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் சமர்பித்த அறிக்கை குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ரயில் கொள்ளையர்கள் குறித்து முக்கியமான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்கள் குறித்த விசாரணை நடக்கிறது. வடமாநிலத்துக்கு ஒரு டீம் சென்றுள்ளது. விரைவில் ரயில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார். 

எஸ்.மகேஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ