Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது... சித்தராமைய்யா சொல்வது பொய்!' - ராமதாஸ்

சென்னை: கர்நாடக அணைகளில் கூடுதல் தண்ணீர் உள்ளது. ஆனால் சித்தராமைய்யா சொல்வது பொய் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடியை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடி செய்ய வசதியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவை தமிழக விவசாயிகள் நேற்று நேரில் சந்தித்து கோரியுள்ளனர். ஆனால், கர்நாடக அணைகள் வறண்டு கிடப்பதால் தண்ணீர் தர முடியாது என சித்தராமைய்யா கைவிரித்து விட்டார்.

அவரது கருத்துக்கள் உண்மையானவை அல்ல. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்த கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி இந்த அணைகளின் நீர் இருப்பு 63.120 டி.எம்.சி.யாகும். 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2276 அடியாகவும், 2922 அடி உயரம் கொண்ட ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2902 அடியாகவும், 2857 அடி உயரம் கொண்ட ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2855 அடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு நீர்மட்டம் 124.80 அடிக்கு எதிராக 94.76 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

இந்த 4 அணைகளின் மொத்த கொள்ளளவில் 55 விழுக்காடு அளவுக்கு தண்ணீர் உள்ளது. இது சித்தராமைய்யா கூறிய அளவைவிட 26 சதவீதம் அதிகமாகும். ஆனால், இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இதுவரை அக்குழுவை அமைக்காமல் மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழு மூலம் காவிரி நிலைமையை மத்திய அரசு கண்காணித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசு இதை செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மாறாக கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தக்குமார், உச்ச நீதிமன்றம் மூலமாக காவிரியில் தண்ணீர் பெறும் தமிழகத்தின் முயற்சியை முறியடிப்போம் என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும். இன்றைய நிலையிலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள 63.12 டி.எம்.சி நீரில் பாதியை, அதாவது 31.56 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட்டால், இப்போது 68.98 அடியாக இருக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அடுத்த சில நாட்களில் 100 அடியாக உயர்ந்து விடும்.

அதன்பின் கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீரில் பாதியை தமிழகத்திற்கு தந்தால் சம்பா பயிரை வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடியும். எனவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக இதற்கு ஆணையிட வேண்டும். தமிழக விவசாயிகள் நேரடியாக சென்று தண்ணீர் கேட்டதால் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர்ந்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, அதை சமாளிப்பது குறித்து விவாதிப்பதற்காக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

ஆனால், தமிழக முதலமைச்சரோ தமக்குத் தான் அனைத்தும் தெரியும் என்பது போல செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை இழந்து வருகிறார். இந்த அணுகுமுறை பயனளிக்காது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறுவது பற்றி விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறி உள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ