Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் ஆசிட் வாங்கிய பின்னணி? மோஷித்தின் நண்பரும் சிக்கினார்

வருமான வரித்துறை அதிகாரி மீது மோஷித் மீது ஆசிட் வீசிய வழக்கில் இரண்டு பேர் சிக்கியுள்ளனர். இதில் ஒருவர் மோஷ்த்தின் நண்பர் ஆவார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்தவர் மகேந்தர்பதக். இவரது மகன் மோஷித் (23). ஹாக்கி வீரரான இவருக்கு கடந்த ஆண்டு வருமான வரி அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அண்ணாநகரில் உள்ள மத்திய வருவாய் குடியிருப்பில் மோஷித் 2 பேருடன் தங்கி இருந்தார். ஆகஸ்ட் 23ம் தேதி இரவு 9 மணியளவில் மோஷித் தனியாக இருந்த போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அவரது முகத்தில் ஆசிட் வீசினார். உடல் முழுவதும் ஆசிட் பட்டதால் மோஷித் அலறி துடித்ததில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை மேற்கொண்ட நிலையில், மோஷித்தின் செல்போனில் இருந்து ஒரு குறிப்பிட்ட பெண்ணின் நம்பருக்கு அதிக நேரம் சாட்டிங் செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்த பிரபுவுக்கும், குறிப்பிட்ட இந்தப் பெண்ணுடன் அறிமுகம் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, மோஷித்துக்கும் அந்தப் பெண்ணுக்கும் அறிமுகமாகியிருக்கிறது. இந்நிலையில், வேலையை விட்டுச் சென்ற பிரபு, எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அங்கிருந்தபடியே, அந்த பெண்ணை கண்காணித்து வந்திருக்கிறார். அப்போது மோஷித்தின் குறுக்கீடு தெரியவர, அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக மோஷித் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பவம் நடந்த இடத்திலிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் ஆசிட் வீசியது பிரபு என்பது தெரியவந்தது. இவர் வருமானவரி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை பிரபு காதலித்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில் மோஷித், வந்தபிறகு டெல்லி பெண், பிரபுவை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, மோஷித் மீது ஆசிட் வீசி அவரது முகத்தை சிதைத்தால் மீண்டும் டெல்லி பெண் தன்னிடம் பேசுவார் என்று கருதியுள்ளார். இதற்காக மோஷித் மீது ஆசிட் வீசியுள்ளார். அவருடன் இன்னொரு வாலிபர் வந்துள்ளார். அவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

இதற்கிடையில், மோஷித் தனியாக வரவில்லை. அவருடன் இன்னொரு நபரும் வந்திருக்கிறார் என்கிற தகவலை போலீஸார் விசாரணையில் தெரிந்துகொண்டனர். அந்த இன்னொரு நபர் விஜய் என்கிற சரவணன். மதுரையில் இன்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் பிரபுவும் உறவினர்கள். அந்த வகையில், பிரபு வேலை பார்த்துவந்த எலக்ட்ரிக்கல் கடையில் இருந்த லெட்டர்பேடை திருடி, விஜய்யிடம் கொடுத்திருக்கிறார். அந்த லெட்டபேடில் சில வீரியம் மிக்க ஆசிட்டுகள் எலக்ட்டிரிக்கல் பணிக்காக வேண்டும் என்று எழுதி மதுரையில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் கொடுத்து ஆசிட்டை வாங்கியிருக்கிறார். அதைத்தான் சம்பவத்தன்று இருவரும் எடுத்து வந்திருக்கிறார்கள். அதைத்தான் மோஷித் மீது வீசியிருக்கிறார்கள். இந்த விவரங்கள் தெரியவந்தவுடன், விஜய்யை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் ஆசிட் வாங்கிய மருந்துக் கம்பெனி உரிமையாளரிடமும் விசாரணை நடக்கிறது. 
 - ஆர்.பி, எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ