Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீஸ் வாகனம் மீது நடிகர் அருண் விஜய் கார் மோதல்!

சென்னை: நடிகர் அருண் விஜய் ஓட்டிச் சென்ற கார், போலீசாரின் வாகனத்தில் மோதியதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று பிரபல நடிகை ஒருவரின் மகள்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது, தனது பி.எம்.டபிள்யூ. சொகுசு காரில்  அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் சென்ற கார், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தில் மோதி இருக்கிறது. காரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்கள் இன்றி உயிர் தப்பி இருக்கிறார். மேலும் நுங்கம்பாக்கம் காவல்துறையினர், நடிகர் அருண் விஜய்யை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இதை தொடர்ந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம் 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மேலும் அருண் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம், அருண் விஜய் நடிப்பில் குற்றம் 23 என்ற படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்