Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும்! - சென்னை வானிலை மையம்

சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திராவுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே மழை தூரல் விழுகிறது.

 

இந்த வானிலை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். அதேபோல, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ