Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரின் முயற்சியால் 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்! - அற்புதம் அம்மாள்

கிருஷ்ணகிரி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரும், தமிழக முதல்வரின் முழு முயற்சியால் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்த வழக்குத் தொடர்பாக, தற்போது மூவர் அமர்வு குழுவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். இந்த குழுவின் முடிவு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 7 பேரின் விடுதலை தொடர்பாக, மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது முதலமைச்சரின் முழு முயற்சியின் காரணமாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ