Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிந்துவின் விஷயத்தில் தமிழக அரசு மௌனமாக இருப்பது ஏன்? #PVSindhu

லிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பி.வி.சிந்துவையே சேரும். பல நாடுகள் பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை என அனைவரும் துவண்டவேளையில், வெள்ளிப் பதக்கம் வென்ற தங்க மகள் அவர். அவருடைய வெற்றி, இந்தியர் அனைவரையும் ஒன்றுசேர்த்தது. போட்டி முடிந்து இந்தியா திரும்பிய அவரை ஆந்திரா, தெலங்கானா மாநில மக்கள் மட்டும் அல்லாமல் மற்ற மாநில மக்களும் அன்போடும் பெருமையோடும் வரவேற்றனர். அவருக்குப் பரிசுகளும், வாழ்த்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

பிற மாநிலங்கள்!

தெலங்கானா மாநில அரசு, 5 கோடி ரூபாய் பரிசுடன் அவருக்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளது. ஆந்திர அரசு 3 கோடி ரூபாயும், நிலம் மற்றும் குரூப் 1 அரசுப் பணியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. டெல்லி அரசு சாய்னா நேவாலுக்கு ரூ.1 கோடியும், சிந்துவுக்கு ரூ.2 கோடியும் அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் 50 லட்சம் ரூபாய் பரிசாக அறிவித்துள்ளார். இந்திய பேட்மிண்டன் சங்கம் 50 லட்சம் ரூபாயும், இந்திய கால்பந்து சங்கம் 5 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளது.

பி.எம்.டபிள்யூ கார்!

ஹைதராபாத் பேட்மிண்டன் தலைவரான வி.சாமுண்டேஷ்வர நாத்திடம் இருந்து பி.எம்.டபிள்யூ காரை பரிசாக பெற்றார், 2012 ஒலிம்பிக்கில் வெண்களம் வென்ற சாய்னா நேவால். சிந்தும், ஒலிம்பிக்கில் வென்றால் கார் பரிசளிப்பதாகக் கூறியிருந்தார் வி.சாமுண்டேஷ்வர நாத். அவர் சொன்னதுபோலவே, அவருடைய நண்பர் சச்சின் டெண்டுல்கர் மூலம் சிந்துவுக்கு நேற்று காரை பரிசாக அளித்தார்.

இப்படி ஒவ்வொரு மாநிலமும் சிந்துவுக்குப் பரிசுகளை அள்ளி வழங்கிவருகிறது. ஆனால், தமிழக அரசு அவர் வெற்றிபெற்றது தெரிந்தும் வாழ்த்துகளைத் தாமதமாகவே தெரிவித்தது. இந்த வெற்றி, இந்தியாவுக்கு ஒரு பெண் போட்டியாளரால் பேட்மிண்டன் மூலம் கிடைத்த முதல் வெற்றி. மாநிலம் வேறாக இருந்தாலும் இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. இதில், ஏன் தமிழக அரசு எந்த ஈடுபாடும் காட்டவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது?

சென்னை ஸ்மாஷர்ஸ் அணி!

சிந்து, சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டன். இந்த அணி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்குச் சொந்தமானது. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மற்றும் இவர்கள் இருவரும் பேசிய டப்ஸ்மாஷ் பல வெளியாகியுள்ளன. இவர், சிந்துவுக்கு ஸ்பான்சர் எனவும் சொல்லப்படுகிறது.

‘‘சிந்துவின் வெற்றி குறித்து தமிழக அரசு மௌனம் சாதிப்பதற்கு, தே.மு.தி.க பின்னணிதான் காரணமாக இருக்கக்கூடும்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இரு கட்சிகளுக்குள் இருக்கும் அரசியல் பகையால், நாட்டுக்காக விளையாடி வென்றவரைப் பாராட்டாமல் இருப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இந்தியாவுக்காக சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் மூலம் வென்ற சிந்துவை இனியாவது தமிழக அரசு அங்கீகரிக்குமா?
 

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ