Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்டியை 'பலி' வாங்கிய ஆட்டோகாரர்! கொலையில் முடிந்த தற்கொலை

குடும்பத்தகராறில் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோகாரர், மூதாட்டி மீது விழுந்தார். இதில் மூதாட்டி உயிரிழந்தார். உயிர் பிழைத்த ஆட்டோகாரர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, குமரன்நகர், ஏ பிளாக்கை சேர்ந்தவர் செல்வம். ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான செல்வம், சம்பளத்தை வீட்டில் கொடுப்பதில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 12.30 மணியளவில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த செல்வம், தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே இருந்து குதித்துள்ளார் செல்வம். அப்போது தரையில் படுத்திருந்த சாரதா என்ற 75 வயது மூதாட்டி மீது செல்வம் விழுந்தார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு இருவரையும், ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சாரதா உயிரிழந்தார். ஆனால் செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமரன்நகர் போலீஸார் விபத்து என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விதி எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது. தற்கொலைக்கு முயன்றவர் உயிரோடு இருக்க... தரையில் படுத்திருந்த மூதாட்டி இறந்து விட்டார். 

எஸ்.மகேஷ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ