Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் திடீர் சஸ்பெண்ட்!

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன், அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு முன் ஞானதேசிகன் மின்வாரியத்தின் சேர்மனாக இருந்தார். அப்போது அவர் மீது நிறைய புகார்கள் எழுந்தன. அந்த விவகாரத்தை இப்போது தோண்டி எடுத்திருக்கிறார்கள். அதோடு வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு ஃபைல் மூவ் ஆனதாம். அதற்கு ஞானதேசிகன் கையெழுத்து போடாமல் இழுத்தடித்தாராம். அதன் காரணமாக ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மின் வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் நத்தம் விஸ்வநாதனும், ஞானதேசிகனும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், கனிம வளங்கள் குறித்த விவகாரம் தொடர்பாக எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம்-கனிம வளத் துறை ஆணையாளருமான அதுல் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுல் ஆனந்த் கடந்த பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம்-கனிம வளத் துறை ஆணையாளர் பொறுப்பை கூடுதலாகவும் கவனித்து வந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அதுல் ஆனந்த், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிரடி பணியிடை நீக்கம், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ