Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிர சிகிச்சைப் பிரிவில் காஞ்சி சங்கராச்சாரியார்!  -கவலையில் காஞ்சிமட பக்தர்கள்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், உடல்நலமில்லாமல் மயக்கநிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ' ஆந்திர மடத்திற்கு விரதம் அனுஷ்டிக்கச் சென்றவர் மயக்கமடைந்தார் என்கின்றனர் காஞ்சி மடத்தின் நிர்வாகிகள். 

காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக இருக்கிறார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரும் இளைய மடாதிபதி விஜயேந்திரரும் கடந்த ஜுலை மாதம் ஆந்திராவில் உள்ள சங்கர மடத்திற்குச் சென்றனர். இந்நிலையில், நேற்று திடீரென மயக்கம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து காஞ்சி சங்கர மட நிர்வாகிகளிடம் பேசினோம். " ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் உள்ள சங்கர மடத்திற்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்காகச் செல்வது வழக்கம். அப்படித்தான் கடந்த ஜூலை மாதம் இரண்டாவது வாரம் பெரியவரும் சின்னவரும் விஜயவாடா சங்கர மடத்திற்கு விஜயம் செய்தனர். 

தொடர்ச்சியான விரதம் அனுசரித்ததால் பெரியவரின் உடலில் ரத்த அழுத்தமும் சோடியம் குறைவும் ஏற்பட்டுள்ளது. சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார். இப்படியொரு நிலை ஏற்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உடனே நாங்களும் அங்கிருந்த மடத்தின் உதவியாளர்களும் அவரை விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். ஐ.சி.யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேன் சோதனை செய்யப்பட்டுவிட்டது. இன்னும் மயக்கநிலையில்தான் இருக்கிறார். தொடர்ந்து ஐ.சி.யு பிரிவில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விரைவில் மடத்திற்கு திரும்புவார்" என்கின்றனர். 

ஆந்திர மருத்துவனையில் காஞ்சி பெரியவர் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலைக் கேள்விப்பட்டு, பக்தர்கள் தொடர்ச்சியாக போன் செய்தும் நேரில் வந்தும் விசாரித்தவண்ணம் உள்ளனர். ' பெரியவர் நலமுடன் இருக்கிறார். அமைதியாக இருங்கள்' என மடத்தின் நிர்வாகிகள் ஆறுதல் சொல்லி வருகின்றனர். 

-ஆ.விஜயானந்த் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ