Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாமாயில் வேண்டாம்! தேங்காய் எண்ணெய் போதும்! - தென்னை விவசாயிகள் கோரிக்கை

தேங்காய் விலை சரிந்ததால் தேங்காய்க்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள், சமூக அமைப்புகள், பெண்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நம்மிடம் பேசிய தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பத்மதாஸ், ‘’தேங்காய் விலை வீழ்ச்சியால் தமிழகம் முழுவதும் தென்னை விவசாயிகள் வறுமையில் உள்ளனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் தென்னை விவசாயத்தை மட்டும் நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. தேங்காய் உற்பத்தி செலவை விட விற்பனையில் மிகக்குறைந்த அளவே விலை கிடைக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான இறக்குமதிக் கொள்கையால் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தி தென்னை விவசாயத்தைப் பாதுகாக்க தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், கேரளாவில் தென்னை விவசாயிகள் நிலையை புரிந்து கொண்ட கேரள அரசு, ஒரு கிலோ உரித்த தேங்காய்க்கு 27 ரூபாய் என்று தேங்காய்க்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்துள்ளது. அதே போல தமிழக அரசும் தேங்காய்க்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதியையும், கொப்பரைத் தேங்காய் இறக்குமதியையும் குறைத்து நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு கொப்பரைத் தேங்காய் ஏற்றுமதியை அரசு ஊக்குவிக்க வேண்டும். 

அரசு அம்மா உணவகம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், கோவில்களில் அன்னதான திட்டம், அங்கன்வாடிகளில் மதிய உணவு ஆகியவற்றில் பாமாயில் எண்ணெயின் பயன்பாடு முழுமையாக உள்ளது. இவற்றில் பாமாயில் பயன்பாட்டை குறைத்து பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பாமாயிலை நிறுத்தி தேங்காய் எண்ணெய் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். ஏற்கெனவே கழுத்தில் தேங்காய் மாலை அணிந்து ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். இன்று மீண்டும் மனு கொடுத்திருக்கிறோம். இனியும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.  


-இ.கார்த்திகேயன், 
படங்கள்: ரா.ராம்குமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ