Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பச்சமுத்துவை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி!

சென்னை: பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே 28-ம் தேதி திடீரென மாயமானார். அதன்பிறகு, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மதனிடம் பல லட்சங்களை கொடுத்ததாக 72 பேர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். சிலரது புகாரில் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை நேரில் சந்தித்துவிட்டு அவரது பரிந்துரை பேரிலேயே மதனிடம் பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தனர். அடுத்து மதனை கண்டுபிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இப்படி மதன் விவகாரம் தொடர்பான புகார்கள் குவிந்ததால், அனைத்தையும் விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணனை நீதிமன்றம் நியமித்தது. ஆனாலும் இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றம் போலீசாரை கடுமையாக எச்சரித்தனர். இந்நிலையில் சினிமா பைனான்சிரியர் போத்ரா கடந்த 25-ம் தேதி பிரஸ்மீட் நடத்தி பச்சமுத்து மீதும், மதன் மீதும் குற்றம் சாட்டினார்.

இவையெல்லாம் இந்த வழக்கில் போலீசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதை தொடர்ந்து, வேறுவழியின்றி ஆகஸ்ட் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு பச்சமுத்து, சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டுர் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டு 26-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பச்சமுத்து தரப்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், போலீஸ் தரப்பிலும், அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை (ஒரு நாள்) பச்சமுத்துவை விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீசாரின் விசாரணைக்குப்பின், இன்று மாலை பச்சமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ