Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோசய்யாவுக்கு குட்பை..! தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர் நியமனம்

ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் அறிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றதில் இருந்து இதுவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவருக்கு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எந்த பிரச்சனையும் இல்லை.

ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31ஆம் தேதி) முடிவடைந்தது. மீண்டும் ஆளுநராக ரோசய்யா நீடிப்பார் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் நியமிக்கப்படலாம் என்றும் ஒருபுறம் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ் (71). முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் கரீம்நகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அவர், 3 முறை ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.

சகாயராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close