Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தையின் உயிரைப்பறித்த ஒரு ரூபாய்

சென்னையில் 5 மாத குழந்தை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் மூச்சு திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, கோயம்பேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கீதா. பிரபு கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியின் 5 மாத குழந்தை தீட்ஷிதா. நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார் தீட்ஷிதா. அப்போது தரையில் கிடந்த ஒரு ரூபாய் நாணயத்தை குழந்தை விழுங்கியது. மூச்சுவிட தீட்ஷிதா சிரமப்பட கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீட்ஷிதாவை பரிசோதித்த போது அவர் ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நாணயத்தை எடுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அதற்குள் தீட்ஷிதா இறந்து விட்டாள்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close