Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

35 ஆண்டுகளில் 65 ஆயிரம் பேரைக் காணவில்லை...! இலங்கை இழப்பு

ர்வதேச காணாமல் போனோர் தினம்’ நேற்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில் காணாமல் போனவர்களை  மீட்கக்கோரி சென்னையில் உள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் ஒன்றிணைந்து புகார் மனுக் கொடுத்துள்ளனர்.

இந்த மனுவை  ம.தி.மு.க., திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழ் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் ஈழ உணர்வாளர்கள் நேரில் சென்று கொடுத்தனர். அப்போது தோழர் தியாகு, திருமுருகன் காந்தி, மல்லை சத்யா உள்ளிட்டோர்  யுனிசெஃப் முன்பாகத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டுக் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் 1983-ல் தொடங்கிய போர் 2009-ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதிக்கட்ட போரில் 1 லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகச் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் 2009-ல் இருந்து 16 ஆயிரம் பேர் போர்க்கைதிகளாக இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என தமிழ் ஈழ உணர்வாளர்கள் கூறி வந்தனர்.

காணாமல் போனவர்கள் பதிவுசெய்ய மறுப்பது ஏன்?

இதனை அப்போதைய அதிபராக இருந்த ராஜபக்க்ஷே, அதை மறுத்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழர்கள் ஆதரவுடன் சிறீசேன அதிபராக உள்ளார். இந்தச் சூழ்நிலையில், ‘‘இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். காணாமல் போனோர் பதிவு அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.


அந்த அடிப்படையில் காணாமல் போனோர் பற்றிய மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமை கமிஷன் இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் பற்றி மூன்று மொழிகளிலும் புகார் அளிக்க வசதியாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அமைக்க பரிந்துரை செய்தது. பெரும் போராட்டத்துக்குப் பின்னர் இதனை ஏற்று, அந்த நாட்டு அரசு மசோதாவை நிறைவேற்றியது. ‘அந்த அலுவலகத்துக்குத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று முழங்கிவந்த நிலையில்,  அங்குள்ள தமிழர்கள் தற்போது புகார் கொடுத்தால்... அதைப் பதிவுசெய்ய மறுப்பதாகத் தமிழ் ஈழ உணர்வாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘‘65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை!’’

புகார் மனுவைக் கொடுத்துவிட்டுச் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘‘இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில் கடந்த 35 ஆண்டுகளில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இவர்கள் அனைவரும் போர்க்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். 2009-ல் மட்டும் 16 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குறித்த வெளிப்படையான அறிக்கையை அந்த நாட்டு அரசு தர மறுக்கிறது. சர்வதேச விதிகளைப் பின்பற்றி அவர்களை  விடுக்காமல் இலங்கை அரசு அமைதி காத்து வருகிறது. அதுகுறித்து விசாரித்து, நடவக்கை எடுக்க வேண்டி ஐ.நா-வும் அமைதி காத்து வருகிறது. அதேபோன்று இலங்கை அரசின் போர்க் குற்றங்களை ஐ.நா.  கண்டிக்கவில்லை. சர்வதேச விசாரணையையும் தொடங்வில்லை. இதை நினைவுபடுத்தவே இந்த மனுவைக் கொடுத்துள்ளோம். இலங்கை அரசுக்கு ஆதரவாக ஐ.நா-வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் செயல்பட்டு வருகிறார். மனித உரிமை மீறல் அங்கு நடந்திருப்பது குறித்து இதுவரை வாய் திறக்காமல் உள்ளார். கடந்த  ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே அதற்கு உதாரணம்’’ என்றார்.

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ