Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகம் புதுச்சேரியில் மழை நீடிக்கும்:வானிலை மையம் அறிவிப்பு!

       

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.   

வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடற்கரைக்கு அருகிலும் தமிழகத்தின் கன்னியாகுமரி ஒட்டியுள்ள கடல் பகுதியிலும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே பரவலாக மித மற்றும் கனத்த மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம்பு மற்றும் புதுச்சேரியில், அனைத்து இடங்களிலும்  மழை தொடரும். மேலும், தமிழகம் மற்றும்  புதுச்சேரி மாநில கடல் பகுதியில், தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல்  55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப நிலையைப் பொறுத்த வரை, அதிகபட்ச  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 32 மற்றும் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ