Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஸ்வரூபமெடுக்கிறது சிறுவாணி விவகாரம் கேரளா சாலைக்கு 'சீல்'

கோவை : சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவை கண்டித்து அணை கட்டும் இடத்துக்கே சென்று எதிர்ப்பை காட்ட பல்வேறு அமைப்புகள் முயன்றனர். இவர்கள் தமிழக - கேரளா எல்லையில் தடுத்து கைது செய்யப்பட்டனர். இதனால் சில மணி நேரங்களுக்கு கேரளா செல்லும் சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோயமுத்தூரின் பெருமைகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியையும் மத்திய அரசிடம் இருந்து கேரளா பெற்றுள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிறுவாணியின் நீர் அணை கட்டி தடுக்கப்படுமேயானல், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இதை தடுக்க வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அணை கட்டும் இடத்துக்கே சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய கோவையில் உள்ள அரசியல் அமைப்பு, இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரளா அரசின் முடிவை கண்டித்தும், மத்திய அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதித்துள்ள வாபஸ் பெற வலியுறுத்தியும் இன்று காலை, கேரளா அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில், அகழி ஊராட்சிப்பகுதிக்கு சென்று எதிர்ப்பினை காட்ட புறப்பட்டனர். 

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் ஆய்வுக்கு சென்றனர். தமிழக - கேரளாவில் உள்ள மாங்கரை அருகே சென்ற போது போலீசார் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், கேரளா அரசுக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். 
இந்த போரட்டம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் யாரும் கேரளாவில் அத்துமீறி நுழைந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சாலையும் சீல் வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறுவாணி விவகாரத்தில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருவதால் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. வரும் 3ம் தேதி (சனிக்கிழமை) சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடக்கிறது. தொடர்ச்சியாக மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "இது அடையாள போராட்டங்கள் தான். கேரளா அரசு தமிழக மக்களின் உணர்வை புரிந்து அணை கட்டும் முடிவை கை விட வேண்டும். இல்லாவிட்டால் கேரளாவுக்கு தமிழக மக்களை ஒன்று திரட்டி பொருளாதார தடை விதிக்கும் வகையில் எந்த அத்தியாவசிய பொருட்கள் செல்லாமல் கேரளாவுக்கு செல்லும் ரயில்களை தடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்," என்றார்.

ச.ஜெ.ரவி,
படங்கள் : தி.விஜய்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ