Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முறைகேடு புகாரை விசாரிக்கலாம்..! அன்புமணி மனு தள்ளுபடி

விதிமுறைகளை மீறி மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டுள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அன்புமணி மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி,  இந்தூர் மற்றும் லக்னோவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு, விதிகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை  டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி அன்புமணி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தம் மீதான குற்றச்சாட்டுப் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ