Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாந்தோப்பில் ரகசிய பான் தொழிற்சாலை..! திடுக் ஆய்வு

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்துள்ள முதலைப்பட்டி எனும் கிராமத்தில் மாந்தோப்பிற்குள் ரகசியமாக செயல்பட்டுவந்த பான், குட்கா தொழிற்சாலையை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.

முதலைப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பான் மற்றும் குட்கா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கிராமத்தில் ஆய்வு  மேற்கொள்ளும்படி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் மருத்துவர் பிருந்தா, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோபிநாத், நாகராஜ், குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதலைப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த அங்கு ரகசிய ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பான் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், பான் பொருட்கள் உற்பத்திக்கும், பேக்கிங் பணிக்கும் பயன்படுத்தி வந்த இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ரகசியமாக மாந்தோப்பில் செயல்பட்ட  ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அதிகாரி பிருந்தாவிடம் பேசினோம்" கடந்த ஒரு மாத காலமாகத்தான் இந்த ஆலை  முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எந்தவிதமான உரிமமும் பெறவில்லை. இந்த ஆலையின் உரிமையாளர் யார் என்ற விபரமும் தெரியவில்லை. நாங்கள் ஆய்வுக்கு சென்றபோது அங்கு பீகார் தொழிலாளர்கள்தான் இருந்தார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ