Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கையின் பிடியில் மீனவர்கள், படகுகள்... ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் : இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட மீனவர்களை விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்துள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இலங்கை பறிமுதல் செய்துள்ள 103 தமிழக மீனவர்களின் விசை படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் மீனவர்களின் விசைப்படகுகளும் கடலில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்ற் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் துறைமுக கடலில் இறங்கிய மீனவர்கள், கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்த கட்டமாக இம்மாதம் 12ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
போரட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், "கொடுக்கும் வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் வாக்குறுதி அளிக்கும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பின்னர் அதை கண்டுகொள்வதில்லை. தங்கள் கோரிக்கையை  நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம்," என்றனர்.


-இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ