Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி இன்னும் தூரம் போகலாம் மெட்ரோ ரயிலில்!

சென்னை: விமான நிலையம்-சின்னமலை இடையே அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 25-ம் தேதி தொடங்கியது. அப்போது, தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை அரசு துறைகளின் மானியகோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பன்னிர்செல்வம், ''சென்னை விமான நிலையம் மற்றும் ஆலந்தூர்-தோமையார் மலை ரயில் நிலையங்களுக்கு இடையே அடுத்த மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கப்படும். மேலும், நிலத்தடி மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ