Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலாக்கத்துறை-கார்த்தி சிதம்பரம் கண்ணாமூச்சி ஆட்டம்...!

 

ர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகும்படி டெல்லியிலுள்ள அமலாக்கப் பிரிவு தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அவர் நேரில் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் பரபரத்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மூன்றாவது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு தராததால் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அமலாக்கப் பிரிவு ஆராய்ந்து வருகிறது. 


ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்குக் கட்டாயப்படுத்தி விற்கப்பட்டதாகவும், இதில் அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2ஜி வழக்கை விசாரிக்கும் டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம்தான் இவ்வழக்கையும் விசாரிக்கிறது. இதற்கிடையே தயாநிதி மாறன் சார்பில் இந்த நீதிமன்றத்துக்கு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது, இதன் மீதான உத்திரவை செப்டம்பர் 5 தேதி வழங்குவதாக சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார்.


ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பான விசாரணையின் போது மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து கார்த்தி சிதம்பரம் இயக்குனராக இருந்த சில நிறுவங்களுக்கு 1.34 கோடி ரூபாய் அளவுக்குப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனையடுத்து அவர் இவ்வழக்கின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார். இந்த நிலையில்தான் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் வரவில்லை என்று தெரிகிறது. எனவே அவரை அமலாக்கப்பிரிவு கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாயின.


கட்டுக்கதையைப் பரப்புகிறதா அமலாக்கப்பிரிவு?


இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமலாக்கப்பிரிவின் முன்பு என் மகன் ஆஜராக மறுப்பதாக ஒரு கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இது உண்மையல்ல. என்னை இழிவு படுத்தும் வகையிலும், என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யும் வகையிலும் இது போல அமலாக்கப்பிரிவு செயல்படுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்படும் போது அமலாக்கப்பிரிவு எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க விரும்புவதாக கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். அமலாக்கப்பிரிவிடம் என் மகன் விளக்கம் கேட்டபோதும், அதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவில்லை" என்று கொந்தளித்திருக்கிறார். 


இதற்கும் அமலாக்கப்பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. "நாங்கள் 5 பக்கங்கள் கொண்ட சம்மனை கார்த்தி சிதம்பரத்துக்கு அனுப்பி உள்ளோம். அதில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தியின் நிறுவனங்கள் செய்த விதிமீறல்கள் குறித்த முழுமையான தகவல்களை அளித்துள்ளோம்" என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளனர். இருதரப்பும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் யார் சொல்வது நிஜம். 
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது அவரது அமைச்சகத்தின் கீழ் வரும் Foriegn Investment Promotion Board மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. 


- கே.பாலசுப்பிரமணி, க.ராஜவேலு (மாணவப் பத்திரிக்கையாளர்)

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ